விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்களை கொண்டது தமிழ்மொழி. அவர்களுள் முதன்மையானவர் ராஜ்சிவா தான் என்பது ஒரு சாமானிய வாசகனான எனது கருத்து. அறிவியல் தகவல்கள் அவ்வளவாக அண்டாதிருந்த தமிழ் வாசகப்பரப்பை தனது இலகு தமிழிலான விளக்கங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டவர் ராஜ்சிவா. ஹிக்ஸ் போசான், அண்டம், குவாண்டம், கருந்துளைகள், பயிர்வட்டம், பறக்கும்தட்டு, மாயன்கள் என்று நாம் மலைத்து பார்த்த சொற்களை எல்லாம், தினமும் அசால்டாக உபயோகிக்கும் அளவுக்கு நம்மிடையே புழக்கத்தில் கொண்டுவந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதுதான் அவரது வெற்றி. இதை எந்தவிதமான பெருமைப்படுத்தல் நோக்கத்திலும் சொல்லவில்லை. இதுதான் உண்மை. எனக்கும் சரி, தற்போது அறிவில ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சரி, வழிகாட்டி ராஜ்சிவா அண்ணன் தான்.
அறிவியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகால மத, மனித நம்பிக்கைகளை அறிவியல் கருத்துக்கள் நிச்சயம் கேள்விக்குட்படுத்தும். அறிவியல் எதையுமே 100% ஆதாரம் இல்லாது ஏற்றுக்கொள்ளாது இல்லையா? அதனால் வெறும் நம்பிக்கைகள் மூலமே தொடர்ந்து வரும் மத கருத்துக்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? அறிவியலின் கேள்விகளில் பல நம்பிக்கைகள் நிச்சயம் ஆட்டம் காணும். நாம் தீவிரமாக நம்பிய ஒரு கருத்து இலகுவாக உடைபடும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள மனித மனம் இடம் தராது. அதனால அறிவியலையும், அறிவியலாளர்களையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள் ஒரு பகுதி மக்கள். இது நாம் எல்லோருமே வழமையாக கண்டுவரும் அனுபவம்தான். ஆனால் இந்த வழமையை மெதுவாக கையாள்கிறார் ராஜ்சிவா. தொடர்ந்து ராஜ்சிவாவின் எழுத்துக்களை படித்துவருகிறேன். எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி எழுதியது இல்லை. இவையெல்லாவற்றையும் விட இவரது வெற்றிக்கு இன்னுமோர் காரணம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரிடையே இல்லாத பழக்கம் அது. “எளிமை”. எழுத்தாளன் வாசகன் என்ற உறவை கடந்து ஒரு சகோதரனை போலவே எல்லோருடனும் பழகும் அவரது தனிப்பட்ட குணமும் ஒரு சக்சஸ்தான். புத்தகத்தை பற்றி எழுத வந்துவிட்டு எழுத்தாளனை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தளவிற்கு ராஜ்சிவா அண்ணனை பிடித்திருக்கிறது :)