வணக்கம் நண்பர்களே
குறிப்பு: இது ஒரு எதிர்ப்பதிவு, நண்பர் துஷியந்தன் எழுதிய பாராட்டலாமே ஜெயலலிதாவை என்னும் பதிவுக்காக அவரது அனுமதியுடன் எழுதப்படுகின்றது
தமிழகத்தில் கொஞ்சக்காலமாகவே கருணாநிதி அலை ஓய்ந்து ஜெயலலிதாப்புயல் வீச ஆரம்பித்துள்ளது. பலரும் ஜெயலலிதாவை ஆதரித்தும் அவருக்கு எதிராகவும் தம் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஒரு சாரர் ஜெயலலிதா திருந்திவிட்டார், நல்லது செய்கிறார் எனவும் மற்றொரு சாரர் இல்லையில்லை ஜெயலலிதா திருந்தவில்லை எனவும் தம் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
உண்மையிலேயே ஜெயலலிதா திருந்திவிட்டாரா?
இனிமேல் முதலமைச்சர் என்ற வகையில் ஊழல்கள் அற்ற நல்லதொரு ஆட்சியை கட்டியமைப்பாரா? என்று நோக்கினால், என்னைப்பொறுத்தவரை அதற்கான விடை பூஜ்ஜியம் என்பதே. காரணம் அவரது கடந்தகால ஆட்சி நடைமுறைகள், இந்த தேர்தலுக்கு முன்னரான அவரது செயற்பாடுகள்.
அவருடைய தற்போதைய செயற்பாடுகளை பாராட்டலாம்தான். ஆனால் பாராட்டுவதற்கு முன்னர் இதே செயற்பாடுகளில் அவர் தேர்தலுக்கு முந்திய, கருணாநிதி ஆட்சியின் போது நடந்து கொண்ட விதம் குறித்து கவனமெடுத்தல் அவசியமாகிறது. ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையில் கூட ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. இடைக்கிடை நான்கைந்து அறிக்கைகள் விட்டதோடு அடங்கிவிட்டார். மாறாக அதை தன் தேர்த்தல் பிரச்சாரத்துக்கான ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தினார். காரணம் ஜெயலலிதாவிற்கு அதற்கான தகுதி இல்லை என்பதோடு ஊழல் என்பது திமுக விற்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, அது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்துக்கே பொதுவானது என்பதால் ஜெயலலிதா அடக்கிவாசித்தார். கருணாநிதி ஊழலில் அண்ணன் என்றால் ஜெயலலிதா தங்கை. வேறொன்றும் வித்தியாசம் இல்லை.
இதை விட ஜெயலலிதாவின் ஆட்சியை அனுபவித்தவர்களுக்கு அவரது குணங்கள் பற்றி தெரிந்திருக்கும். அவரது ஆட்சிகாலத்தில் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடினால் கூட போலீஸ் மூலம் தடியடி நடத்தி போராட்டத்தை கலைப்பார். தன் அமைச்சர்களைக்கூட மாதமொருமுறை மாற்றிக்கொண்டேயிருப்பார். இதெல்லாம் வெளியில் தெரிந்த விடயங்கள். அனுபவித்தவர்களுக்குத்தான் எல்லாம் வெளிச்சம். இது எல்லாம் முன்னர்தான். இப்போது அவர் அப்படியல்ல என்பவர்களுக்கு, இந்த தேர்தலின்போது அவர் அமைத்த கூட்டணியும், கூடணிக்காரர்களுக்கு தன் இஸ்டப்படி தொகுதிகளை அறிவித்ததும், நீண்டகாலம் அவருடன் சேர்ந்து இயங்கிய வைகோவிற்கு அவர் கொடுத்த பரிசும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் சரி.
அடுத்து இப்போது ஓடிக்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனை சமச்சீர் கல்வி. இந்த விடயத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. கருணாநிதி தன் வரலாறுகளை பாடத்திட்டத்தில் புகுத்தியது அவரது தவறுதான். ஆனால் அதற்காக அதை தடுத்து இரண்டு மாத காலங்கள் இழுத்தடித்து மாணவர்களின் கல்வியை வீணாக்கியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதோ முடித்திருக்க வேண்டிய விடயத்தை பெரிய பிரச்சினையாக்கி மாணவர் விடயத்தில் விளையாடி தன் அரங்கேற்றத்தை சிறப்பாகவே ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
அடுத்து ஈழத்தமிழர் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலங்களில் இருந்தே புலி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் ஜெயலலிதா. அதற்கான காரணம் என்னவென்று நான் அறியவில்லை. ரஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றதனால்தான் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு சென்றார் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தபோதும், 1990 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர். எல். எஃப் தலைவர் பத்மநாபா விடுதலைப்புலிகளால் சென்னையில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்து திமுக ஆட்சியை கலைத்து ஆட்சிக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. அந்த தேர்தலில் ரஜீவ்காந்தியின் கொலைதான் பெரும் செல்வாக்கு செலுத்தியது என்றாலும் அந்த தேர்தலுக்கு அடிப்படையான பத்மநாபா கொலைவிவகாரத்தை கையிலெடுத்தபோதே புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்துவிட்டார் ஜெயலலிதா. ஆக ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு நிலை என்பது ஆரம்பகாலத்தில் இருந்தே அவரது அரசியலுக்கான அடித்தளமாகத்தான் ஜெயலலிதாவால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த விடயத்தை விடுத்து ஈழத்தமிழ் மக்கள் மீதான அவரது நிலைப்பாடு என்னவென்று பார்த்தால், அவருடைய கவனம் மக்களை விட புலிகள் மீதுதான் அதிகம் பொதிந்திருந்தது என்பதை அவரது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் அறியக்கிடக்கிறது. காரணம் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அங்கு புலிகளை முன்னிலைப்படுத்தியதாகவே அவரது செயற்பாடுகள் இருந்திருக்கிறது. இலங்கையில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், உலகமே எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தது. ஏன், போலி நாடகதாரியான கருணாநிதிகூட பேருக்காவது நீலிக்கண்ணீர் வடித்தார். ஆனால் ஜெயலலிதா அது சம்மந்தமாக வாயே திறக்கவில்லை. வாய் திறக்காமலிருந்தால் கூட பரவாயில்லை. “போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் செய்வார்கள்” என்று அரக்கன் கூட சொல்லத்தயங்கும் ஒரு கொடியவார்த்தையை ஈழத்தவரின் நெஞ்சில் ஈட்டியாய் இறக்கியவர். காரணம் அவருக்கு அங்கு முக்கியமாக தெரிந்தது மக்களின் அழிவைவிட புலிகளின் வீழ்ச்சிதான். எந்தவொரு ஈழத்தமிழனும் உயிருள்ளவரை அவரை மன்னிக்கவே மாட்டான்.
அப்படிப்பட்டவர் இப்போது ஈழத்தமிழருக்காக கதைக்கிறார் என்றால், ஈழத்தமிழருக்காக சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றுகிறார் என்றால் அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது. எம்மை ஒட்டுமொத்தமாக கொல்லும்போது வேடிக்கை பார்த்தது மாத்திரமல்லாமல், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் இப்போது பல்டி அடித்து அதை எதிர்த்து எமக்கு ஆதரவாக நிற்கிறார் என்றால் நாம் எப்படி நம்புவது. ஒன்று மட்டும் புரியவில்லை. ஜெயலலிதா இப்போது செய்வது பாவத்துக்கான பிராயச்சித்தமா, அல்லது ஆட்சியை தொடர்வதற்கான அத்திவாரமா?
அரசியல்வாதிகள் எப்போதுமே செய்த பாவங்களை உணர்பவர்கள் இல்லை. அந்தவகையில் ஜெயலலிதா தன் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகத்தான் ஈழத்தமிழர் விடயத்தை கையில் எடுத்திருக்கிறார்.
நன்றியுடன்
மதுரன்

”மாற்றம் ஒன்றுதான் எப்போதுமே மாற்றமில்லாதது”
”தீயவர்கள் எப்போதுமே தீயவர்களாக இருப்பதில்லை”
என்ற கருத்துக்கள் எல்லாம் அரசியல்வாதிகள் விடயத்தில் செல்லாக் காசாகிவிடுகின்றன. மக்களின் மனதில் போலியான சந்தர்ப்பங்களின் மூலம் ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்து அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் தம் அரசியலை நடத்துவதுதான் அன்று முதல் இன்றுவரை அரசியல்வாதிகளின் கான்செப்ட். அது மாற்றமே இல்லாதது.
ஜெயலலிதாவின் இப்போதைய அடக்கமான ஆட்சியை ஒரு மாற்றமாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஒரு பலமான ஆட்டத்துக்கான அறிகுறியாகத்தான் அதை கொள்ளமுடியும்.
பின்குறிப்பு: இங்கு ஜெயலலிதாவைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளதால் யாரும் என்னை கருணாநிதி ஆதரவாளனாக கொள்ளாதீர்கள். முன்னரே குறிப்பிட்டதுபோல இது ஒரு ஜெயலலிதாவை பற்றிய எதிர்ப்பதிவு.
பின்குறிப்பு 2: அரசியலைப் பொறுத்தவரை நான் இன்னமும் வளர்ச்சியடையாத சிறுவன் தான். மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவும் நான் அறிந்த, என் அறிவுக்கு எட்டிய விடயங்களே... தவறு இருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டுங்கள்
நன்றியுடன்
மதுரன்
விஷயம் இம்புட்டு சீரியஸா போகுது.. ம்ம்
ReplyDelete///ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையில் கூட ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.// அதெப்பிடி பாஸ் ஆத்தா கூட ஐயாவுக்கு சளைச்சவர் இல்லையே...))
ReplyDeleteஜெ.வின் ஈழ ஆதரவு சீமானைத் தவிர்த்து மற்ற அனைத்துத் தமிழர்களாலும் நம்ப முடியாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது..அதையே நீங்களும் பிரதிபலித்துள்ளீர்கள்..
ReplyDelete\\\“போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் செய்வார்கள்” என்று அரக்கன் கூட சொல்லத்தயங்கும் ஒரு கொடியவார்த்தையை ஈழத்தவரின் நெஞ்சில் ஈட்டியாய் இறக்கியவர்\\\ மன்னிக்க முடியாத வார்த்தைகள் இவை .....
ReplyDelete//ஜெயலலிதா இப்போது செய்வது பாவத்துக்கான பிராயச்சித்தமா, அல்லது ஆட்சியை தொடர்வதற்கான அத்திவாரமா?
ReplyDelete......ஜெயலலிதா தன் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகத்தான் ஈழத்தமிழர் விடயத்தை கையில் எடுத்திருக்கிறார்.//
இதில் மட்டுமே மாறுபடுகிறேன்..தமிழகத் தமிழ்ர்களுக்கு ஈழப் படுகொலை ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல..அதற்கு ஆதாரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசின் வெற்றியும்..
ஜெ.விற்கும் இது நன்றாகவே தெரியும்..மேலும் ஆட்சியைத் தக்கவைக்க இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது..ஏனெனில் தனிப் பெரும்பான்மையுடனே ஜெ. ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் என்ன முடிவெடுத்தாலும் அது அவரது ஆட்சியைப் பாதிக்காது..
அப்படியென்றால் ஜெ. மாறி விட்டாரா?..
நம்ப முடியவில்லை..இல்லை..இல்லை!
///1990 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர். எல். எஃப் தலைவர் பத்மநாபா விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்து திமுக ஆட்சியை கலைத்து ஆட்சிக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. ///ஜெயலலிதா முதல் முறையா முதல்வர் ஆனது 91 ல் என்று நினைக்கிறேன் ..அதாவது ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்பு (ராஜீவ் கொலை மே-ஜெயா பதிவியேர்ப்பு ஜீன் (1991 ) )
ReplyDeleteபோதாததுக்கு இப்ப நம்ம கோத்தபாய வேறு ஜெயா மேடத்தை சூடாகிவிட்டுள்ளார் ..பார்ப்பம் போக போக தெரியும்.
ReplyDelete@KANA VARO
ReplyDeleteசீரியஸ் எல்லாம் இல்லைங்க
@கந்தசாமி.அதெப்பிடி பாஸ் ஆத்தா கூட ஐயாவுக்கு சளைச்சவர் இல்லையே...))///
ReplyDeleteஅதான் அமுக்கி வாசிச்சிட்டாங்க.
@செங்கோவிஜெ.வின் ஈழ ஆதரவு சீமானைத் தவிர்த்து மற்ற அனைத்துத் தமிழர்களாலும் நம்ப முடியாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது..அதையே நீங்களும் பிரதிபலித்துள்ளீர்கள்.///
ReplyDeleteஆமாம். எங்கும் பொங்கி விழும் சீமான் அம்மாவை எப்படித்தான் நம்பினாரோ தெரியவில்லை.. ஒருவேளை மறுபடியும் சிறை செல்ல விரும்பவில்லையோ
@koodal balaமன்னிக்க முடியாத வார்த்தைகள் இவை .....//
ReplyDeleteஆமாம் சகோதரா... இந்த வார்த்தைகள் வரலாற்றில் எப்போதுமே மறக்கமுடியாதவை
ஜெயலலிதா இப்போது செய்வது பாவத்துக்கான பிராயச்சித்தமா, அல்லது ஆட்சியை தொடர்வதற்கான அத்திவாரமா?
ReplyDelete......ஜெயலலிதா தன் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகத்தான் ஈழத்தமிழர் விடயத்தை கையில் எடுத்திருக்கிறார்.//
இதில் நான் நண்பர் செங்கோவியின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.மேலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது நடந்ததல்ல படுகொலை.வேண்டுமானால் அவர் சொன்ன, “போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் செய்வார்கள்”என்ற சொல்லுக்கான பிராயசித்தமாக ஈழ ஆதரவு நிலையை எடுத்துக் கொள்ளலாம்.மேலும் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பது மறுக்கப் பட்ட ஒன்றா என்ன?.
@செங்கோவி//ஜெயலலிதா இப்போது செய்வது பாவத்துக்கான பிராயச்சித்தமா, அல்லது ஆட்சியை தொடர்வதற்கான அத்திவாரமா?
ReplyDelete......ஜெயலலிதா தன் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகத்தான் ஈழத்தமிழர் விடயத்தை கையில் எடுத்திருக்கிறார்.//
இதில் மட்டுமே மாறுபடுகிறேன்..தமிழகத் தமிழ்ர்களுக்கு ஈழப் படுகொலை ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல..அதற்கு ஆதாரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசின் வெற்றியும்..
ஜெ.விற்கும் இது நன்றாகவே தெரியும்..மேலும் ஆட்சியைத் தக்கவைக்க இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது..ஏனெனில் தனிப் பெரும்பான்மையுடனே ஜெ. ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் என்ன முடிவெடுத்தாலும் அது அவரது ஆட்சியைப் பாதிக்காது..
அப்படியென்றால் ஜெ. மாறி விட்டாரா?..
நம்ப முடியவில்லை..இல்லை..இல்லை!//
நான் கூறியது இந்த ஆட்சிக்காலத்தை அல்ல. திமுக முதுகுடைந்து விட்டதால் திமுகவால் இனி அதிமுக விற்கு ஈடுகொடுப்பது என்பது கொஞ்சம் கடினமே. இந்த இரண்டு கட்சிகளை விட மூன்றாம் கட்சியொன்று அடுத்த தேர்தலில் ஆட்சியைப்பிடிக்கும் அளவிற்கு அசுரவேகத்தில் வளர்வது என்பது சாத்தியமாகாத ஒன்று. ஆகவே கீழே விழுந்த திமுகவை நிமிர முடியாத அளவிற்கு அடித்து வீழ்த்துவதுடன் அடுத்த ஆட்ச்சிக்காலத்தையும் கைப்பற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கமாக இருக்கும். அதற்குத்தான் அவர் ஈழத்தமிழர் விடயத்தை கையிலெடுத்துள்ளார். ஈழத்தமிழர் விடயம் தமிழகத்தேர்தலில் பெருமளவு செல்வாக்கு செலுத்தாவிடினும் வருங்காலத்தில் கொஞ்சம் அதிகரிக்கலாம் என நினைக்கிறேன்.
இது என் கருத்து.. ஒருவேளை தவறாகவும் இருக்கலாம்
@கந்தசாமி.ஜெயலலிதா முதல் முறையா முதல்வர் ஆனது 91 ல் என்று நினைக்கிறேன் ..அதாவது ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்பு (ராஜீவ் கொலை மே-ஜெயா பதிவியேர்ப்பு ஜீன் (1991 ) )//
ReplyDeleteஆமாம் கந்தசாமி. 1991 இல் தான் ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் 1990 ஆம் ஆண்டு பத்மநாபா கொலையுடன் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் முடிவாகியது
@கந்தசாமி.போதாததுக்கு இப்ப நம்ம கோத்தபாய வேறு ஜெயா மேடத்தை சூடாகிவிட்டுள்ளார் ..பார்ப்பம் போக போக தெரியும்//
ReplyDeleteபார்ப்பம்,,,, கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்பமே
வணக்கம் நண்பா,
ReplyDeleteஅரசியலில் நான் சிறுவன் என்று சொல்லிவிட்டு
அலசி ஆராய்ந்து அசத்தலான ஒரு அரசியல் கட்டுரையை வரைந்ததுக்கு
முதலில் என் பாராட்டுக்கள்.
மது.. நீங்கள் சொல்லியதில் பல வற்றை ஒத்துகொள்கிறேன், ஆனால் நீங்கள்
சொல்லிய எல்லாவற்றுடனும் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.
//ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையில் கூட ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை//
இல்லை நண்பா, ஸ்பெக்ரம் ஊழல் என்று ஒன்று நடைபெறாதது போலவே திமுகா இருக்க
காங்கிரஸ் அமைதி காக்க, நக்கீரன் போன்ற சில அல்லக்கை பத்திரிகைகளும் ஒத்து ஊத
யாருடைய கைகளுக்கும் அகப்படாமல் மறைந்து கொண்டிருந்தாய் ஒரே ஒரு அறிக்கை மூலம்
எல்லோர் கண்ணுக்கும் தெரிய வைத்த பெருமை ஜெயலலிவைத்தான் சேரும். ஜெயாவின்
தொடர் அறிக்கைகளால்தான் காங்கிரஸ் எங்கே தன பெயரும் சேர்ந்து கிழிந்து விடுமோ
என்ற அச்சத்தில் திமுகா மேல் நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
//மாறாக அதை தன் தேர்த்தல் பிரச்சாரத்துக்கான ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தினார்//இதுவும் தப்பான கருத்து நண்பா. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தை ஜெயா போகும் இடமெல்லாம் முழங்கினார்
இது பற்றி விகடனே ஜெயாவை பாராட்டி தேர்தல் சமயம் கட்டுரை வரைந்தது. ஏன் ஜெயா தன் சகாக்களிடம்
கூட தேர்தல் சமையம் கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது பிரச்சாரத்தின் போது ஸ்பெக்ரம் ஊழல்,
குடும்ப ஆதிக்கம், மின் வெட்டு இவையைத்தான் முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்ய சொல்லி.
//இப்போது அவர் அப்படியல்ல என்பவர்களுக்கு, இந்த தேர்தலின்போது அவர் அமைத்த கூட்டணியும், கூடணிக்காரர்களுக்கு தன் இஸ்டப்படி தொகுதிகளை அறிவித்ததும்//
நண்பா இதை அப்போதே விமர்சித்தவர்கள் ஏராளம், ஆனால் இதில் கடைசி வரை உறுதியாக இருந்தார் பின் சிலருக்கு சில இடங்களை மட்டும் "கவனிக்க சில இடங்களை மட்டும்" விட்டுக்கொடுத்தார், ஆனால் இப்போது அவருடைய இமாலய வெற்றிக்கு இந்தமுறைதான் காரணம் என்று கூட சொல்லலாம்
இல்லையா???????
//நீண்டகாலம் அவருடன் சேர்ந்து இயங்கிய வைகோவிற்கு அவர் கொடுத்த பரிசும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் சரி//
வைகோ மேல் எனக்கு இப்பவும் அன்பு இருக்கு, ஆனால் வைகோவுக்கு இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் செல்வாக்கு என்ன என்பது
ஜெயாவுக்கு தெரியாதா என்ன..?? தெரிந்துமா அவருக்கு 30 40 சீட்டை கொடுக்க முன் வருவார்?? பழக்க தோஷத்துக்காக வைகோவால்
ஆட்சியை இழக்க ஜெயா ஒன்றும் முட்டாள் அல்ல. வைகோ கட்சியை விட்டு வெளியேறிய பின் அவர் சகாக்கள் "இல்லை கருகி சூரியன் உதிக்கட்டும் " என்று ஜெயாவை திட்டி திரிந்த பின் கூட ஜெயா ஆட்சியை புடித்த பின் தன் அரியானை ஏறும் விழாவுக்கு வைகோவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கி
அழைப்பிதழும் அனுப்பியது அவர் மாறின்னர் என்பதை விட வைகோ மேல் வைத்து இருந்த மரியாதையை காட்டி நின்றது.
//கருணாநிதி தன் வரலாறுகளை பாடத்திட்டத்தில் புகுத்தியது அவரது தவறுதான். //
வரலாறை மட்டுமா புகுத்தி இருக்கார் ...?? தெரிந்தால் சரி... இதை தெரிந்த பின்னும் பலர் ஜெயாவை குற்றம் சாட்டுவதுதான் வேடிக்கை.
//ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு நிலை என்பது ஆரம்பகாலத்தில் இருந்தே அவரது அரசியலுக்கான அடித்தளமாகத்தான் ஜெயலலிதாவால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது//
ஆரம்பகாலத்தில் ஜெயா எவ்வளவு புலி சப்போட்டானவர் என்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும்.
புலிகள் செய்த சில கொளைகலால்தான் அவர் மாறினார் அதிலும் குறிப்பாக தன் மதித்த ராஜீவ் கொலை. ஜெயாவின் புலி எதிர்ப்புக்கான
காரணங்களை சொல்ல முடியும், "துஷ்யந்தன் ஒரு இனத்துரோகி" என்ற பட்டம் "இபோதைக்கு வேணாமே நண்பா...
அடுத்து ஜெயா இப்போது இலங்கை மக்கள் மென் அன்பு செலுத்துவது அரசியல் இலாபத்துக்குதான் என்று பெரும்பாலானவர் சொல்ல்கிறார்கள்
ஏன் அண்மையில் ராஜபக்ஷாவின் தம்பி கூட சொன்னார், இது முற்றிலும் தவறு செங்கோவி அண்ணாவின் இக்கருத்தை பாருங்கள்
இதுதான் என பதிலும்...
//ஜெயலலிதா இப்போது செய்வது பாவத்துக்கான பிராயச்சித்தமா, அல்லது ஆட்சியை தொடர்வதற்கான அத்திவாரமா?
......ஜெயலலிதா தன் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகத்தான் ஈழத்தமிழர் விடயத்தை கையில் எடுத்திருக்கிறார்.//
இதில் மட்டுமே மாறுபடுகிறேன்..தமிழகத் தமிழ்ர்களுக்கு ஈழப் படுகொலை ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல..அதற்கு ஆதாரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசின் வெற்றியும்..
ஜெ.விற்கும் இது நன்றாகவே தெரியும்..மேலும் ஆட்சியைத் தக்கவைக்க இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது..ஏனெனில் தனிப் பெரும்பான்மையுடனே ஜெ. ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் என்ன முடிவெடுத்தாலும் அது அவரது ஆட்சியைப் பாதிக்காது..
அப்படியென்றால் ஜெ. மாறி விட்டாரா?..
நம்ப முடியவில்லை..
//கருணாநிதி ஊழலில் அண்ணன் என்றால் ஜெயலலிதா தங்கை.//
ReplyDeleteதற்போதைய சூழலில் அண்ணனை விட தங்கை மேல்:)
அரசியலில் யாரும் திருந்தி விடமாட்டார்கள் என்பது ஜெயிலுக்கு ஒரு முறை சென்றவர் மீண்டும் அதே தவறை திரும்ப செய்வார் என்கிற மாதிரியான வாதம்.
ஜெயலலிதா தனது தேவைகளைக் குறைத்துக்கொண்டுள்ளதால் போயஸ் வீடு,கொட நாடு ஓய்வு,ஹெலிகாப்டர் செலவு,வாகன செலவு,உடை,உணவு தவிர பெரிதாக சம்பாதிக்க தேவையில்லையென நினைக்கிறேன்.
பணம் போதுமென்கிற பொருளல்ல.பார்க்கலாம்.
@சேக்காளிமேலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது நடந்ததல்ல படுகொலை//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேக்காளி.
முன்னர் முதல்வர் பதவியில் இருந்தவர், தொடர்ந்தும் செல்வாக்கோடு அரசியலில் இருந்தவர் படுகொலை நடக்கும்போது குரல் கொடுக்காதிருந்தது எவ்வகயில் நியாயம். சின்ன சின்ன சினிமாக்காரர்களே கொதித்தெழுந்தபோது இவர் கண்டுகொள்ளாதிருந்தது தகுமா?
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
ReplyDeleteவணக்கம் துஷி
ஒரே ஒரு அறிக்கை மூலம்
எல்லோர் கண்ணுக்கும் தெரிய வைத்த பெருமை ஜெயலலிவைத்தான் சேரும்.//
அறிக்கை விட்டார்தான். ஆனால் அந்த அறிக்கைதான் ஊழல்பேர்வழிகள் சிக்கியத்தற்கு காரணம் என்பது ரொம்ப ஓவரப்பா
//இதுவும் தப்பான கருத்து நண்பா. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தை ஜெயா போகும் இடமெல்லாம் முழங்கினார் //
எங்கே முழங்கினார். தேர்தல் மேடைகளில்தானே. அதைத்தான் நானும் சொன்னேன் துஷி. அதை விட ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுத்தாரா?
//ஏன் ஜெயா தன் சகாக்களிடம்
கூட தேர்தல் சமையம் கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது பிரச்சாரத்தின் போது ஸ்பெக்ரம் ஊழல்,
குடும்ப ஆதிக்கம், மின் வெட்டு இவையைத்தான் முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்ய சொல்லி//
அதே அதே... அதைத்தான் நானும் கூறினே துஷி.. இதெல்லாம் ஜெவிற்கு பிரச்சாரப்பொருட்களன்றி வேறில்லை
என்னை பொறுத்தவரை *இப்போது நமக்காக குரல் கொடுக்கும்
ReplyDeleteராமதாஸ் திருமாளவன் போன்ற சில அரசியல் நடிகர்களை விட
ஜெயா எவ்வளவோ மேல்....
அதேபோல் தமிழ் நாட்டில் ஒன்று திமுகா ஆட்சி அல்லது அதிமுகா ஆட்சி தான்,
( மூன்றாவது அணி ஆட்சியை புடிக்கும் என்பது எல்லாம் பேச்சு மட்டும்தான் இப்போதைக்கு)
இதில் கருணாநிதியின் திமுகாவை விட
ஜெயாவின் அதிமுகா எவ்வளோவோ நல்லம் என்பது
என்னுடைய மாற்றமில்லாத கருத்து.
கருணா நிதி சிறந்த முதல்வராக இருக்கவே முடியாது
வேணும் என்றால்
சிறந்த "குடும்ப தலைவராக" இருக்க முடியும்.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் ஆனால் இப்போது அவருடைய இமாலய வெற்றிக்கு இந்தமுறைதான் காரணம் என்று கூட சொல்லலாம்
ReplyDeleteஇல்லையா???????//
ஒருகாலமும் அப்படிச்சொல்ல முடியாது துஷி....
கலைஞர் குடுமத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட எகோபித்த வெறுப்பும்,ஆத்திரமும் திமுக மற்றும் அதிமுகவிற்கு சரியான மாற்றுக்கட்சி இல்லாததாலும்தான் ஜெவின் இமாலய வெற்றிக்கு காரணம்
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
ReplyDeleteவரலாறை மட்டுமா புகுத்தி இருக்கார் ...?? தெரிந்தால் சரி... இதை தெரிந்த பின்னும் பலர் ஜெயாவை குற்றம் சாட்டுவதுதான் வேடிக்கை.//
இப்போது என்ன செய்யப்போகிறார்கள். கலைஞர் சம்மந்தப்பட்ட அத்தனை பக்கங்களையும் நீக்கிவிட்டுத்தானே புத்தகங்களை கொடுக்கப்போகிறார்கள். இதை முன்னமே செய்திருந்தால் மாணவர்களின் கல்வி இழுபடாமல் இருந்திருக்குமல்லவா
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்ஆரம்பகாலத்தில் ஜெயா எவ்வளவு புலி சப்போட்டானவர் என்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும்.
ReplyDeleteபுலிகள் செய்த சில கொளைகலால்தான் அவர் மாறினார் அதிலும் குறிப்பாக தன் மதித்த ராஜீவ் கொலை. ஜெயாவின் புலி எதிர்ப்புக்கான
காரணங்களை சொல்ல முடியும், "துஷ்யந்தன் ஒரு இனத்துரோகி" என்ற பட்டம் "இபோதைக்கு வேணாமே நண்பா... //
நண்பா துஷியந்தா...
நான் மேலே குறிப்பிட்டதை தாங்கள் பார்க்கவில்லையா...ரஜீவின் கொலைக்கு முன்னாலேயே ஜெ புலி எதிர்ப்பை கையில் எடுத்துவிட்டார்.. அது மட்டுமல்லாது மூர்க்கத்தனமான அவரது புலி எதிர்ப்பு என்பது காரணமற்ற ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாகத்தான் எனக்கு படுகின்றது
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்என்னை பொறுத்தவரை *இப்போது நமக்காக குரல் கொடுக்கும்
ReplyDeleteராமதாஸ் திருமாளவன் போன்ற சில அரசியல் நடிகர்களை விட
ஜெயா எவ்வளவோ மேல்.//
எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் துஷி... அதில் எது சிறந்தது என்று தேடுவது முட்டாள்த்தனம்
@ராஜ நடராஜன்
ReplyDeleteபார்ப்போம்.. எல்லோரையும் நம்பி நம்பி வீண்போனவந்தானே தமிழன்.. எல்லோரையும் நம்பிவிட்டோம்.. ஜெயலலிதாவையும் பொறுத்து பார்ப்போம்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//மதுரன் said...
ReplyDelete@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
வணக்கம் துஷி
ஒரே ஒரு அறிக்கை மூலம்
எல்லோர் கண்ணுக்கும் தெரிய வைத்த பெருமை ஜெயலலிவைத்தான் சேரும்.//
அறிக்கை விட்டார்தான். ஆனால் அந்த அறிக்கைதான் ஊழல்பேர்வழிகள் சிக்கியத்தற்கு காரணம் என்பது ரொம்ப ஓவரப்பா
//இதுவும் தப்பான கருத்து நண்பா. ஸ்பெக்ரம்ல் ஊழ விவகாரத்தை ஜெயா போகும் இடமெல்லாம் முழங்கினார் //
எங்கே முழங்கினார். தேர்தல் மேடைகளில்தானே. அதைத்தான் நானும் சொன்னேன் துஷி. அதை விட ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுத்தாரா?
//ஏன் ஜெயா தன் சகாக்களிடம்
கூட தேர்தல் சமையம் கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது பிரச்சாரத்தின் போது ஸ்பெக்ரம் ஊழல்,
குடும்ப ஆதிக்கம், மின் வெட்டு இவையைத்தான் முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்ய சொல்லி//
அதே அதே... அதைத்தான் நானும் கூறினே துஷி.. இதெல்லாம் ஜெவிற்கு பிரச்சாரப்பொருட்களன்றி வேறில்லை
//
திமுகா மேல் நடவடிக்கை எடுங்கள் மத்திய அரசு கவிழாமல் இருக்க நான் உதவி செய்குறேன் என்று ஜெயா காங்கிரசுக்கு
தூது விட்டதை மறந்துவிட்டீர்களா?? மது. அப்போது இதை விமர்சித்தவர்கள் பலர் ஜெயா காங்கிரசுடன் சேர துடிக்கிறார் என்று கூட
சொன்னார்கள், இப்போது இப்படி சொல்லும் பலர் அப்போது அப்படி சொன்னார்கள். காங்கிரஸ் திமுகா மேல் நடவடிக்கை எடுக்க தொடங்கியதுக்கு
காரணமே ஜெயா மேல் உள்ள பயத்தால்தான். எங்கே ஜெயா இதைவைத்து ஆதாயம் தேடிவிடுவாரோ என்ற அச்சத்தால்தான்.
ஸ்பெக்ரம்ல் விவகாரத்தை ஜெயா தேர்தலின் போதே பயன் படுத்திய வடியாத்தான் அது படிப்பறிவு அதிகம் அற்ற கிராம மக்களிடம் கூட
அதிகம் போய் சேர்ந்தது. அதனால்தான் அது தேர்தலிலும் எதர் ஒலித்தது.
ஸ்பெக்ரம்ல் விவகாரத்தில் இப்போது நியாமான நடவடிக்கைதானே நடக்குது
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகள் கிடைத்த வண்ணம் இருக்கே இதில் ஜெய என்ன செய்ய முடியும்.
ஒருவேளை இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து
ஜெயாவும் அமைதியாக இருந்தால் உங்கள் கருத்து சரியே
ஜெயாவுக்கு அந்த வேலையை மத்திய அரசு கொடுக்கவில்லை.
ஒருவேளை மத்திய அரசு இந்த விவகாரத்தில் தூங்கினால் அப்போது ஜெயாவின் அடுத்த நடவடிக்கைகள்
திமுகாவுடன் சேர்த்து காங்கிரசுக்கும் ஆப்பு அடித்துவிடும். ( இந்த பயம் தான் காங்கிரசுக்கோ ...??? )
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
ReplyDeleteதுஷி உங்கள் கருத்துக்களில் உறுதியாகவே நிற்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்
ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.. இந்த விடயங்களை ஜெயா கையிலெடுத்தது தேர்தலுக்காகத்தான். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். அதுதான் உண்மை. தேர்தலுக்கு முன்னர் அவர் இதுபற்றி வாய்திறக்காமல் இருந்ததுக்கு என்ன காரணம் சொல்லப்போகின்றீர்கள்.? இதெல்லாம் அரசியல் விளையாட்டு துஷி.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்உங்கள் கருத்துக்களை ஒருதடவை திரும்ப படித்துப்பாருங்கள் துஷி.. அதிலேயே அவற்றுக்கான விடையும் உள்ளது.. நடராஜன் சொன்னது போல கருணாநிதியை விட ஜெயலலிதா பரவாயில்லை என்று சொல்லலாமே தவிர ஜெயலலிதா உத்தமர் என்று சொல்லிவிட முடியாது
ReplyDeleteபாருங்கள்.. அவர்களை பற்றி பேச ஆரம்பித்ததும் எங்களுக்குள்ளேயே சண்டை வந்துவிட்டது
Ippothu work il nikkuren,
ReplyDeleteIvarukkaana pathilai iravukku vanthu tharukiren.
பதிவும் பின்னூட்டங்களும் அனல் பறக்கிறது.
ReplyDelete@கோகுல்
ReplyDeleteஅனலா எங்க? எங்க?
ஜெ.வின் ஈழ ஆதரவு நிலை - திடீர்ப்பாசம் பல நாட்களாக எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பெரிய தலைசுற்றலான விஷயம்தான்!
ReplyDeleteஏன்?
எதுக்காக?
எப்படி?
நம்ப முடியவில்லை!!!!!
மதுரன், நல்லதை நினைக்கலாமே!
ReplyDeleteநீங்க இரண்டு பேரும் அடிபடுங்கோ நான் பார்த்து ரசிக்கிறேன்...இப்படி..
ReplyDeleteஒருநாள் விடியும்............
நல்ல அலசல், சரியான கருத்துக்களையே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் தேவையில்லாத தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்களே ஏன்? தங்களின் மறுமொழிகளும் சரியான திசை நோக்கியே இருக்கின்றன.பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்றைய நிலமையில் கலைஞரை விடவும் ஜெயலலிதா பரவாயில்லையே.... ஊரில சொல்லுவார்களே ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரைன்னு அதைப்போல...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
என்னத்த சொல்றதுன்னு தெரியல.. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
ReplyDeleteமாப்ள நல்ல அலசல்.....என்னை பொறுத்த வரை துரோகியை விட எதிரியை நீங்கள் நம்பலாம்...ஏனெனில் அவன் ஈட்டியை நெஞ்சுக்கு நேரே எறிபவன்.....துரோகியை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.....
ReplyDeleteஇப்போது அம்மா நடந்து கொள்வது ஒரு வித அரசியல்....ஏனென்னில் இப்போது கருணாதி என்ன கத்தினாலும் இலங்கை விஷயத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்....எனவே எப்போதும் போல் இப்போதும் இலங்கை விஷயம் ஒரு கருவி...அதை இதுவரை சரியாக பயன் படித்தி வந்த ஆள் தன் பிழையால் இழந்து விட்டார்...இந்த முறை இந்தம்மா பயன்படுத்த தொடங்கி விட்டார் அவ்வளவே!
m m
ReplyDeleteIt seems she is better than ”கருநாய்”நிதி! Both are only in words but nowadays she is doing something. By the way we can't expect much from these political culprits.
ReplyDeleteஎங்களுக்கு எதாவது பயன்கிடைச்ச மட்டும் பாத்திட்டு இவங்கள் பற்றி புழுகி பாராட்டம இருக்கிறதே மேல். பழசை மறக்ககூடாதுதான்!
குறிப்பு: இது ஒரு எதிர்ப்பதிவு, நண்பர் துஷியந்தன் எழுதிய பாராட்டலாமே ஜெயலலிதாவை என்னும் பதிவுக்காக அவரது அனுமதியுடன் எழுதப்படுகின்றது//
ReplyDeleteஅவ்.....நல்ல வேளை துஸி தப்பிச்சார்,.
இல்லேன்னா நாம துஸியின் தலையினை உருட்டி, உங்கள் பதிவின் மூலமாக நியாயம் கேட்டிருப்போமல்லவா..
இருங்க படிச்சிட்டு வாரேன்.
மச்சி, அம்மாவின் அரசியலும் சந்தர்ப்பவாத அரசியல் தான், விரிவான கருத்துக்களோடு மாலை மீட் பண்றேன்.
ReplyDelete