என்ன வேலையாக இருந்தாலும் வாரத்தில் ஒரு தடவை கொத்துரொட்டி சாப்பிடுவதற்காக நண்பர்களுடன் புறப்பட்டுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு போதையாகவே ஆகிவிட்டது இந்த கொத்துரொட்டி மோகம். நம்ம நண்பர்கள் அனைவரும் கொத்துரொட்டி பிரியர்கள் என்பதாலும் வாரத்துக்கு ஒருவர் என்ற ரீதியில் கொத்துரொட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணுவதாலும் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறது எங்கள் கொத்துரொட்டி பயணம் :) வெற்றிகரமாக என்றாலும் அவ்வப்போது சில சிக்கல்களையும், சில இலியானா சிக்கன்காரர்களையும் சந்திப்பதும், அதன் பின்னர் கொத்துரொட்டியே வேண்டாம் என்று முடிவெடுப்பதும், வாரமுடிவில் தீர்மாணத்தை மாற்றி புதிய கொத்துரொட்டி கடை தேடுவதும் வழமை. சேட்டை படம் பார்த்தவர்களுக்கு இலியானா சிக்கன் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் :)
Showing posts with label கொத்துரொட்டி. Show all posts
Showing posts with label கொத்துரொட்டி. Show all posts
Friday, June 28, 2013
கொத்துரொட்டி - Time to lead
Posted under Social, அனுபவம், கொத்துரொட்டி, பதிவுகள் on 12:24 PM by Mathuran with
8 comments
