கடந்த வருடம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதிலிருந்து தரமானதொரு சினிமாவாக புத்திஜீவிகளால் கொண்டாடப்பட்டு வந்தத with you without you திரைப்படத்தை நேற்று யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்க்கமுடிந்தது. தாஸ்தவேஸ்கியின் குறுநாவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.
படம் பார்த்து முடிந்தபோது என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “கொண்டாடுவதற்கு இந்த படம் எந்த வகையில் தகுதி பெறுகிறது??” நீண்டநேரம் அசையாமல் இருக்கும் கமெராவும், மெதுவாக நகரும் திரைக்கதையும் ஒரு படத்தை நல்லதொரு கலைத்திரைப்படம் என்று வரையறுத்துவிட போதுமானதாக இருக்கிறதா ?




