Sunday, July 7, 2013

சிங்கம் 2 - என் பார்வையில் - இது விமர்சனம் அல்ல


விமர்சனம் ஏற்கனவே நிறையப்பேரு எழுதிட்டாங்க, கூடவே நம்மளுக்கு இந்த விமர்சனம் எல்லாம் செட் ஆகாத மேட்டரு. அதுதான் உசாரா தலைப்பில “என் பார்வையில்” என்று போட்டுட்டேன் :) ஆக்சுவலி இந்த படத்தை பார்க்க முதல்நாளே ஓசியில ஒரு டிக்கெட் கிடைச்சிச்சு. பட் ட்ரெயிலர் படு பயங்கரமா மெரட்டினதால ஓசின்னாலும் பரவாயில்லை... ஆளை விடுங்கடா என்று எஸ்கேப் ஆகிட்டேன்.

எந்த பக்கம் திரும்பினாலும் ஆஹா, ஓஹோ, அட்டகாசம் டைப் விமர்சனங்கள்.நேற்று இரவே படத்தின் காமெரா பிரிண்ட் டவுன்லோட் பண்ணிட்டேன்.சரி... இவ்வளவு நல்லாயிருக்குன்னு சொல்றாங்களே.. போய்த்தான் பார்ப்போம் என்று இன்னிக்கு சொந்த காசு செலவு பண்ணி தியேட்டருக்க இறங்கியாச்சு. ஆச்சரியமான மேட்டர் என்னான்னா, யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்குத்தான் கூட்டம் அள்ளும். ஆனா இன்றைக்கு அவங்களுக்கு ஈகுவலா என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு இணையா சூர்யா படத்துக்கும் கூட்டம். எனக்கு தெரிஞ்சு காக்க காக்கவுக்கு பிறகுதான் சூர்யாவுக்கு ரசிகர் பட்டாளம் உருவாச்சு.. யாழ்ப்பாணத்தில அதுகூட குறைவு. வாரணம் ஆயிரம் வந்தப்போ நம்ம ஸ்கூல்ல ஒரு பத்து பதினைஞ்சு பசங்க சூர்யா ரசிகர்னு சொல்லிக்கிட்டாங்க. ஆனா இன்னைக்கு வந்தளவு கூட்டம் இதுவரைக்கும் எந்த சூர்யா படத்துக்கும் வந்ததில்லை. அதிலும் ஃபேமிலி, பொண்ணுங்கதான் அதிகம். ஞாயிற்றுக்கிழமை வேற...

வழக்கமாவே பெரிய நடிகர்களோட படத்துக்கு நடக்கிற கொடுமை, டிக்கெட்ல 200 ரூபா பிரிண்ட் பண்ணிட்டு 350 ரூபா வசூல் பண்ணுறாங்க. அவனவன் வீட்லயே ஹோம் தியேட்டர் வச்சிருக்கிறாங்க. புது படம் ரிலீஸ் ஆகி 2 அல்லது 3 நாளிலயே நல்ல கிளியர் பிரிண்ட் கிடைச்சிடுது. தியேட்டர்காரங்க இப்பிடியே அட்ராசிட்டி பண்ணிட்டிருந்தா சீக்கிரமே எல்லா தியேட்டரையும் இழுத்து மூடிடவேண்டியதுதான் :(  டிக்கெட் விலையை பார்த்து பதறிப்போனாலும் “பரவாயில்லடா, படம் பார்க்கக்கூடியமாதிரி இல்லை என்றாலும் பார்க்கிறதுக்கு கலர் கலரா இத்தனை பொன்ணுங்க இருக்காங்களேடா” அப்பிடீன்னு நண்பன் தைரியமூட்டினான்.. அட, இது நல்ல ஐடியாவா இருக்கே..!!!

படத்தை பற்றி சொல்லனும்னா, என்னாத்த சொல்ல. விமர்சனங்களை நம்பி ஓவர் எதிர்பார்ப்போட போனா எதுவுமே இல்லை என்றுதான் சொல்லனும். இடைவேளை வரை ஸ்லோவா போய் அப்புறம் சூடு பிடிக்கிறது படம். கதை என்று பெரிசா எதுவுமே இல்லை. மொக்கை கதை. ஆனா ஹரியின் ஷார்ப்பான திரைக்கதை, கதை மொக்கை என்று யோசிக்கவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறது. அதோடு படத்துக்கு பெரிய ப்ளஸ்  சூர்யா. பஞ்ச் டயலாக்குகள் மூலம் அவ்வப்போது எரிச்சல்படுத்தினாலும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார்.டான்ஸ் ஆடினது சூரியாவா அல்லது டூப்பா என்று யோசிக்கும் அளவுக்கு செம. வழக்கமா சூர்யா கையை விரிச்சுக்கொண்டு ரெண்டு காலிலயும் துள்ளுவாரே.. அதை மாதிரி இல்லாம நெஜமாலுமே செமையா ஆடியிருக்கிறார். படத்தை தூக்கி நிறுத்தியதில்  சூர்யாவும் திரைக்கதையும் முக்கிய பங்கு. வேறு எதுவுமே படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 

ஹன்சிகா சூர்யாமேல் ஒருதலையாக காதல் கொள்வது, தன்னை கடத்திவிட்டார்கள் என்று சொல்லி சூர்யாவை தனியாக பேச வரவழைப்பது, சூர்யா கோபத்தில் அடித்ததும் தன் காதலை சொல்வது... etc, etc சப்பா எத்தனை படத்தில் பார்த்து சலித்துப்போன காட்சிகளை டிங்கரிங் பண்ணி முதல் பாதியை ஓட்டிவிட்டார் ஹரி..

கயிறு கட்டி சண்டை பிடிக்கிறதெல்லாம் தமிழ் சினிமா கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அதை பிடித்துக்கொண்டு தொங்குவது எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஒரே அடியில் சுவரை உடைப்பது, கையால் அடித்து கார் கண்ணாடியை நொருக்குவது... ஏன் சூர்யா ஏன்?? விஜய் அஜித்தே அதெல்லாம் கைவிட்டு ஓரளவுக்கு யதார்த்தமான கதைகளில் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... யதார்த்தமான கதைகளில நடிச்சிட்டிருந்த சூர்யா ஏன் மறுபடி அந்த ரூட்டுக்கே போறார்னு தெரியல்ல..!!! ஆனாலும் ஒரு விசயம் ஒத்துக்கனும்... என்ன மாயமோ தெரியல்ல... சூர்யா பத்துப்பேரை அடிச்சுப்போட்டாலும் ரசிக்கக்கூடியதா இருக்கு :) விவேக் + சந்தானம் காமெடிங்கிற பேரில ஏதேதோ பண்ணுறாங்க. சிரிப்பே வரல்ல. சந்தானம் எல்லாம் இந்த படத்துக்கு தேவையே இல்லாத கேரக்டர். ஹீரோயின் எங்கிற பேர்ல ரெண்டு பேர் வாறாங்க, அவங்க எதுக்கு வாறாங்க, என்ன பண்னுறாங்கன்னே புரியல்ல. ஹன்சிகா சிங்கத்துக்கு ஒரு தடவை ஹெல்ப் பண்ணுது, அப்புறமா செத்து போயிடுது. ஹீரோயின் இல்லாம படம் எடுக்கமுடியாது என்ற ட்ரெண்டை எப்பதான் மாத்தப்போறாங்களோ.

பஞ்ச் என்ற பெயரில் சூர்யா அப்பப்ப எதையோ கத்துகிறார். அதுக்கு எக்கோ எஃபெக்ட் வேற போட்டுவிட்டுட்டாங்க.. ஐயகோ..!! “ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரைக்கும்...” சூர்யா சொல்ல பக்கத்தில இருந்த நண்பன் “ என்னடா.. இப்ப பஞ்ச் எங்கிற பேரில பழமொழி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க: என்றான் :) எத்தனை வில்லன்கள் படத்தில் இருந்தாலும் நம்ம மயில்வாகனத்தை அடிச்சுக்க ஒருத்தர் இல்லை. அதுகூட படத்துக்கு ஒரு மைனஸ் தான். 

மொத்தத்தில சிலர் சொல்லுறது மாதிரி படம் மோசமும் இல்லை. சிலர் சொல்வது போல ஆஹா ஓஹோ டைப்பும் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு தடவை பார்க்கலாம். டிக்கெட்டில் பிரிண்ட் பண்ணினபடி 200 ரூபா வாங்கியிருந்தால் கொடுத்த காசுக்கு படம் ஒர்த்தா இருந்திருக்கும். மேலதிகமா வாங்கின 150 ரூபாவும் கொஞ்சம் அதிகம்தான் :)

படம் ஆவரேஜ்தான். போட்டிக்கு எந்த படமும் வரல்ல என்றதாலயும், விளம்பரங்களாலயும் படத்தை ஹிட் ஆக்கிடுவாங்க. ஏற்கனவே சில தில்லுமுல்லுகள் நடந்தேறிட்டுது. 4ம் திகதி 6 மணிக்கு படம் ரிலீஸ். ஆனா சூரியன் எஃப் எம்மோட சேர்ந்து சக்ஸஸ் பார்டி கொண்டாடிய வீடியோ கிளிப் 3 மணிக்கே யூடியூப்ல ரிலீஸ் ஆகிடிச்சு :P போதாக்குறைக்கு 5ம் திகதி மாலையே சூப்பர் ஹிட் என்ற வாசகத்தோட சிங்கம் 2 போஸ்டர் ரிலீஸ் :)

6 comments:

  1. நான் கூடப்(ப்ரீயா)பாத்தனே,இந்த மொக்கைய!ஹி!ஹி!!ஹீ!!(உபயம்:ராஜ்.டீ.வீ)

    ReplyDelete
  2. Subramaniam Yogarasa // அதுக்குள்ள டிவிலயும் போட்டுட்டாய்ங்களா :P

    ReplyDelete
  3. மதுரன்,
    படத்தை பத்தி நடுநிலையோடு அலசி இருக்கீங்க. என்னை பொறுத்தவரை அப்ப அப்ப இது மாதிரியான பக்கா மசாலா படங்கள் வரதும் நல்லது தான். அப்ப தான் ஒரு balance Maintain ஆகும்.

    ReplyDelete
  4. மதுரன் said...
    Subramaniam Yogarasa // அதுக்குள்ள டிவிலயும் போட்டுட்டாய்ங்களா :P////டீ.வீ. ல இல்லை மகனே! 'வெப்' ல.http://www.rajtamil.com/

    ReplyDelete
  5. நடுநிலையான விமர்சனம்...

    எல்லாருமே ஆஹா... ஓஹோன்னு ஒரே புகழாத்தான் புகழுறாங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கிட்டத்தட்ட இதையே தான் என் விமர்சனத்திலும்(சாரி..பார்வையிலும்) சொல்லியிருந்தேன். உங்க அறிமுகத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் வருவேன்.

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |