Thursday, October 13, 2011

மானம் மலிவு விற்பனை : இலங்கை தமிழ் இணைய ஊடகங்கள்

இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத்தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.

ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலும் இணைய ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஊடகங்கள் சிறுபிள்ளைத்தனமானவர்களின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது, சமீப காலத்திய யாழ் தமிழ் இணைய ஊடகங்களின் செய்ற்பாடுகள் மூலம் புலனாகிறது.


ஊடக தர்மம் என்றால் என்னவென்றே அறியாமல் வெறும் ஹிட்ஸை மாத்திரமே கருத்தில் கொண்டு இவர்கள் வெளியிடும் செய்திகள் அபத்தமானவை ஆபாசமானவை. அதிலும் முக்கியமாக Newjaffna, TamilCNN போன்றவை இந்த விடயத்தில் தாராளமாக, எந்தவித தயவு தாட்சனியம் இன்றியும் செய்திகளை பிரசுரித்து வருகின்றன. ஆனால் அவர்கள் வெளியிடும் செய்திகளில் அனேகமானவை கருவுக்கு உருக்கொடுக்கப்பட்டவையே. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் ஓடிவிட்டாள் என்றால் அவர்கள் அதை செய்தியாக்கி அந்த செய்திக்கு இடும் தலைப்பு எவ்வாறு இருக்கும் தெரியுமா?
 “ யாழ் மாணவி வாலிபனுடன் தலைமறைவு”
இவ்வாறுதான் இருக்கிறது அவர்களின் தலைப்புகளும் செய்திகளும். அண்மையில் கூட Newjaffna தளம் ஒரு செய்தி வெளியிட்டிருந்ததது” செல்போனில் வந்த காதலால் கற்பவதியாகிய யாழ்.இளம்பெண்” என்று ஒரு செய்தியை பிரசுரித்து அதனுடன் அந்த பெண்ணின் புகைப்படம் வீடியோ என்பவற்றையும் இணைத்து அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கையையே அழித்துவிட்டார்கள் இந்த கலாச்சார காவலர்கள். இவர்களிடம் கேட்கிறேன், இதே நிலை உன் அக்காவிற்கோ தங்கைக்கோ வந்தால் அவர்களிடம் பேட்டி எடுத்து அவர்களின் போட்டோவையும் போடுவாயா? எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு. 
இது மாத்திரமல்ல, சிறுவர் தினத்தன்று சுப்பிரமணியம் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் கலந்துகொண்டனர். அங்கு இராணுவத்தினரால் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. அதற்கு இவர்கள் போட்ட செய்தி என்ன தெரியுமா? “ஆமியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதுக்கு வந்த சிறுமிகள்” என்று அந்த காணொளியையும் இணைத்திருந்தார்கள். ஒரு சாதாரண விடயத்தை எந்தளவிற்கு பெரிதாக்கியிருக்கிறார்கள் பாருங்கள். இவர்களுக்கு தேவைப்படுவது தமிழ் மக்களின் கலாச்சார பேணுகையோ, அல்லது அவர்களின் இன வளர்ச்சியோ அல்ல. மாறாக எமது இன மானத்தை சந்தையில் வைப்பதம் மூலம் ஈட்டும் பணமே அவர்களது நோக்கம். பணத்துக்காக சொந்த இனத்தின் மானத்தையே விற்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஒரு கேவலம்கெட்ட, அடிமட்ட சமூகமாக சித்தரித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் எத்தனை நல்ல விடயங்கள் நடக்கின்றன அவை எதுவும் இவர்களுடைய கண்களுக்கு தெரிவதில்லையா?. தெரிந்தாலும் அதை போட்டால் யாரும் பார்க்கமாட்டார்கள். ஹிட்ஸ் கிடைக்காது. பணம் சம்பாதிக்க முடியாது.

சுதந்திர ஊடக அமைப்பிற்கெதிரான இவர்களின் அறிக்கையும் என் கேள்விகளும்

அண்மையில் யாழ்ப்பாண சுதந்திர ஊடக அமைப்பு இவர்களின் இத்தகைய தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அறிக்கை வெளியாகிய மறு நிமிடமே துள்ளியெழுந்த இந்த கலாச்சார காவலர்கள் நாம் செய்வதை செய்வோம், அதை கேட்க நீ யார் என்னும் ரீதியிலாக மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த அறிக்கைக்கு அவர்களிடமே சில விளக்கம் கேட்கிறேன்.

இங்கே சிவப்பு நிறத்தில் உள்ளவை அவர்களின் அறிக்கை.

//இவ்வாறான குரல்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் எழுவதாக இருந்தால் அதற்கு புலிகளின் முன் அனுமதி பெற்று யார் யார் அதற்கு தலைவர் செயலாளராக வரவேண்டும் என புலிகளே தெரிவு செய்வார்கள். புலிகள் தாங்கள் தெரிவுசெய்பவர்களில் தேசத்துரோகிகள் என அவர்களது மனதில் தென்படுபவர்களை களை எடுத்தே இவ்வாறான குரல்களை ஒலிக்கச்செய்வார்கள். //

இப்போது சுதந்திர ஊடக அமைப்பு எப்படி உருவானது என்பது பிரச்சினை அல்ல. புலிகள் தெரிவு செய்தால்தான் அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். சுதந்திர ஊடக அமைப்பு உங்களுக்கெதிராக வெளியிட்ட அறிக்கை சரியானதுதானே. தவிர தேவை அற்று புலிகளை இதற்குள் இழுக்கிறீர்களே... புலிகள் பற்றி நீங்கள் சரியாக அறிந்திருந்தால் உங்களை போன்றவர்களுக்கு எப்படியான கடுமையான தண்டனைகள் கிடைத்திருக்கும் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் சொல்லும் தேசத்துரோகிகள் பட்டமும் உங்களுக்கே கிடைத்திருக்கும். அதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்ப்தில்லை.

இன மானத்தை விற்கும் நீங்கள் உத்தமர்கள், தியாகிகள். அதை தட்டி கேட்பவர்கள் தேசத்துரோகிகளா. இன்னும் எத்தனை காலத்துக்கு உங்களை புலிகளுக்கு ஆதரவானவர்கள் போல காட்டி போலி வேசம் போடப்போகின்றீர்கள்?

//ஆனால் தற்போதைய நிலையில் சுதந்திர ஊடக அமைப்பு உருவாகும் சுதந்திரம் தாராளமாக இருக்கின்ற காரணத்தினால் தேசியத்தை பற்றாக வைத்திருப்பதுபோல் நடித்து பேர் பெற்ற உதயன் பத்திரிகை சுதந்திர அமைப்பை உருவாக்கியது//

இதை பற்றி சொல்லும் அருகதை உங்களுக்கு கிடையாது. இப்போது நீங்கள் வெளியிடும் செய்திகள் போன்று ஏன் புலிகளின் காலத்தில் நீங்கள் வெளியிடவில்லை. இப்போது நடக்கும் , நீங்கள் கலாச்சார சீரழிவு என்று கூறும் சில செயற்பாடுகள் அப்போதும் நடந்தனவே. ஆண்கள் பெண்களை காதலித்தார்கள். பெண்கள் ஆண்களை காதலித்தார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றினார்கள். ஏன் அப்போது நீங்கள் அப்படி செய்தி போடவில்லை. நீங்கள் சொன்ன அதே சுதந்திரம் தாராளமாக கிடைக்கின்ற படியால்த்தானே இப்படி செய்திகள் போடுகின்றீர்கள்?

//எவ்வாறு ஒரு தனி நபர் தன்னுடைய செயற்பாடுகளை சமூகத்திற்கு பாதிப்பாக செயற்படுத்துகின்றாரோ உதாரணமாக மலம் கழிக்கும்போது மற்றவர்களின் மூக்கிற்கு மணம் ஏற்படாதவாறு, சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்காது கழித்தல் வேண்டும்.அவ்வாறு செய்யாது தெருவோரங்களிலும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் மலசலம் கழித்தால் பகுத்தறிவு உள்ள மனிதனின் செயல் என்று நாம் கருதி அவனது பிழைகளை திருத்துவதற்காக அவன் மலசலம் கழிக்கும்போது எமது செயற்பாடுகளினால் அவனை ஊடகத்தில் காட்டுவோம். இது தனி நபரை தாக்கும் விடயம் அல்ல//

சரி. நான் ஒன்று கேட்கிறேன். உன் குடும்பத்தில் ஒருவன் தவறு செய்தால் குடும்பத்தாருடன் சேர்ந்து அவனது தவறுகளை கண்டிப்பாயா, அல்லது ஊர் மக்களை கூப்பிட்டு அவர்கள் மத்தியில் வைத்து சந்தி சிரிக்கும்படி கண்டிப்பாயா?

அதை விடுவோம். பல பெண்கள் பற்றிய செய்திகளை அவர்கள் படத்துடன் போட்டு அவர்களின் வாழ்க்கையை பாழாக்குகிறாயே. அதற்கு என்ன காரணம்.

--------------  இதற்கு மேல் பதிவு நீண்டுவிடும் என்பதால், அவர்களின் அறிக்கை பற்றி ஒரு தொகுப்பாக தருகிறேன் -------------------

* அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் தமக்கு குடாநாட்டில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பதாக. ஒரு விடயம் தெரியுமா? ஆபாசத்தளங்களுக்கு கூடத்தான் அதிகளவிலான வாசகர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லோரும் அப்படியான தளங்களை ஆதரிக்கிறார்கள் என்று இல்லையே. நீங்கள் வைக்கும் ஆபாசமான தலைப்புக்களுக்கு வாசகர்கள் வரத்தான் செய்வார்கள். அதற்காக அதை அவர்களின் அங்கீகாரமாக கொள்ளமுடியாது

* அடுத்ததாக செய்திகளை தாம் ஊடகமாக வெளியிடுவதில்லை. வாசகர் போலவே செய்திகளை தருகிறோம் என்று கூறியிருந்தார்கள். இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பாடசாலைக்கு செல்ல பஞ்சிப்படும் குழந்தைபிள்ளை தலையில் கை வைத்துக்கொண்டு “அம்மா வயித்துக்குத்து” என்று சொல்வது போலுள்ளது இந்த விளக்கம். இன்னுமொன்று சொல்லியிருந்தார்கள். இதுபோன்றதொரு ஆபாசமான செய்தியை உதயன் பத்திரிகை விளம்பரம் கிடைக்காது என்ற காரணத்தால் போடவில்லையாம். எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விளக்கம். ஊடகம் என்றால் ஆபாசச்செய்திகளை மட்டுமே பிரசுரிக்கவேண்டும் என்பதே இவர்களின் வரைவிலக்கணம்.

* உதயன் பத்திரிகையில் அதிக இலாபமீடியபோதும் பணியாளர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக சாடியிருந்தார்கள். இவர்கள் எத்தனை பதிவர்களின் பதிவுகளை காப்பி செய்கிறார்கள். அந்த பதிவர்களுக்கு இவர்கள் என்ன கொடுக்கிறார்கள். இவர்களுடைய மானத்தை விற்று பிழைக்கும் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்


இதற்கு மேல் அவர்கள் கூறியது எல்லாமே சிறு பிள்ளைத்தனமான வாதங்கள். உண்மையிலே இவர்கள் ஒழுங்கானவர்களாக இருந்தால் சுதந்திர ஊடக அமைப்பின் கருத்துக்குத்தான் மறுப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கவேண்டுமே தவிர உதயன் பத்திரிகையயோ, சரவணபவன் மீதோ தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்திருக்கக்கூடாது. அதிலிருந்தே அவர்களின் வக்கிர குணம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

இதே போல்தான் TamilCNN தளமும் உதயன் பத்திரிகை மீதும் சரவணபவன் மீதும் அருவருக்கத்தக்க வகையில் தனிமனித தாக்குதலையே நடத்தியிருக்கிறது. சொந்தமாக எதையும் எழுத வக்கில்லாதவர்கள் தம் பிழை பிடிபட்டதும் சீறிப்பாய்கிறார்கள்.

உறவுகளே நீங்களே சொல்லுங்கள். யாழ்மக்களை பகிரங்கமாக மானபங்கப்படுத்தும் இப்படியான தளங்களை எதிர்ப்பது தவறா? அப்படி எதிர்த்தால் அவர்கள் தேசத்துரோகிகளா?

ஆனால் ஒன்று. இப்படியான தளங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எம் மக்கள் உங்களை துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

77 comments:

  1. இணையத்தில் தமிழ் பதிவர்கள் இதற்க்கு எதிராக ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி !இது மக்களிடையே கொஞ்சமாதல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமென நம்புவோம்!

    ReplyDelete
  2. இணையத்தில் தமிழ் பதிவர்கள் இதற்க்கு எதிராக ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி !இது மக்களிடையே கொஞ்சமாதல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமென நம்புவோம்!

    ReplyDelete
  3. மச்சி இந்த நியூ ஜப்னா போன்ற இனைய தளங்களை நடத்துபவர்களை காறி துப்பினாலும் ..நடு சந்தில நிக்க வச்சு செருப்பால அடிச்சாலும் ரேசம் என்டதே வராது ...

    ReplyDelete
  4. இந்த இணையத்தளங்களின் பெயர்களை சுட்டி காட்டி எழுதியதுக்கு உங்களுக்கு பாராட்டுக்கள் மது ...

    ReplyDelete
  5. ////* அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் தமக்கு குடாநாட்டில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பதாக. ஒரு விடயம் தெரியுமா? ஆபாசத்தளங்களுக்கு கூடத்தான் அதிகளவிலான வாசகர்கள் இருக்கிறார்கள்.// ஹே ஹே

    ReplyDelete
  6. ///* உதயன் பத்திரிகையில் அதிக இலாபமீடியபோதும் பணியாளர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக சாடியிருந்தார்கள். இவர்கள் எத்தனை பதிவர்களின் பதிவுகளை காப்பி செய்கிறார்கள். அந்த பதிவர்களுக்கு இவர்கள் என்ன கொடுக்கிறார்கள். இவர்களுடைய மானத்தை விற்று பிழைக்கும் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்/// இந்த பரதேசிகள் எதுவுமே சொந்தமாய் எழுதுவதில்லை ..எல்லாம் அடுத்தவன் தளங்களில் காபி பண்ணுவது தான்..

    உப்பிடி பரபரப்பா "அவள் கர்ப்பமானாள் ,அவள் அவனோடு ஓடினால்,கலாசார சீரழிவு மயிர் மண்ணாங்கட்டி ' எண்டு எழுதுரத்தில மட்டும் இவர்களை அடிச்சுக்க வேறு எவனும் இல்லை

    ReplyDelete
  7. இத்தகைய கலாச்சார சீரழிவுக்கு எதிராக ஒருமித்து குரல் உயர வேண்டும்.இவர்களையெல்லாம் ஊடக ஆட்கள் என்று சொல்வது தவறு.திருட்டு காபிபேஸ்ட் ஆசாமிகள்.

    ReplyDelete
  8. இந்த நாதாரி இணையத்தளம் நடத்துற ஜந்துக்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று தான் உப்பிடி "யாழ் ,தமிழ் .தேசியம் "என்ற பெயர்களை பாவித்து உங்க இனையத்தளத்தை நடத்தாதீர்கள்..உங்கள் நாத்தம் பிடிச்சா செயர்ப்பாடுகளால் எங்கள் மண்ணையும் மக்களையும் நாறடிக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்கள் பெயர்களிலோ இல்லை உங்களை பெத்ததுகள் பெயர்களிலோ இணையத்தளத்தை நடத்துங்கள்...
    செய்திகளாக உங்கள் குடும்பங்களில் நடக்கும் சீர்கேடுகளையும் வீடியோவோடு போடுங்கள்... இன்னும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்..

    ReplyDelete
  9. ////“ஆமியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதுக்கு வந்த சிறுமிகள்”////

    சே எவ்வளவு ஒரு கேவலமான விடயம்.. இனத்துவேசம் விதைக்கவா இப்படி எழுதுகிறார்கள்

    ReplyDelete
  10. ஃஃஃஅடுத்ததாக செய்திகளை தாம் ஊடகமாக வெளியிடுவதில்லை. வாசகர் போலவே செய்திகளை தருகிறோம் என்று கூறியிருந்தார்கள்.ஃஃஃ

    என்னையா பதிலிது... உங்க தளத்திற்கு நீங்கள் தானே பொறுப்பு.. இதென்ன கள்ளு கொட்டிலா நடக்குது..

    பொறுங்க மிகுதிக்கு விடிய வாறன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

    ReplyDelete
  11. @மைந்தன் சிவா
    நாம் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இதுபோன்ற கயவர்களிடம் இருந்து எமது மண்ணை காப்பாற்ற முடியும்.
    நன்றி மைந்தன்

    ReplyDelete
  12. @கந்தசாமி.மச்சி இந்த நியூ ஜப்னா போன்ற இனைய தளங்களை நடத்துபவர்களை காறி துப்பினாலும் ..நடு சந்தில நிக்க வச்சு செருப்பால அடிச்சாலும் ரேசம் என்டதே வராது ...//

    அது சரிதான் கந்தசாமி. ஏனென்றா அவங்களுக்கு முக்கியம் பணம்தான்

    ReplyDelete
  13. @கந்தசாமி.
    இந்த இணையத்தளங்களின் பெயர்களை சுட்டி காட்டி எழுதியதுக்கு உங்களுக்கு பாராட்டுக்கள் மது ...//

    நன்றி கந்தசாமி
    நாம் எதற்கு பயப்படவேண்டும்.

    ReplyDelete
  14. @கந்தசாமி.இந்த பரதேசிகள் எதுவுமே சொந்தமாய் எழுதுவதில்லை ..எல்லாம் அடுத்தவன் தளங்களில் காபி பண்ணுவது தான்..

    உப்பிடி பரபரப்பா "அவள் கர்ப்பமானாள் ,அவள் அவனோடு ஓடினால்,கலாசார சீரழிவு மயிர் மண்ணாங்கட்டி ' எண்டு எழுதுரத்தில மட்டும் இவர்களை அடிச்சுக்க வேறு எவனும் இல்லை//

    ஆமாம் பாஸ். ஆனால் நாங்கள் இதை பற்றியெல்லாம் கதைக்ககூடாதாம்.

    ReplyDelete
  15. @shanmugavelஇத்தகைய கலாச்சார சீரழிவுக்கு எதிராக ஒருமித்து குரல் உயர வேண்டும்.இவர்களையெல்லாம் ஊடக ஆட்கள் என்று சொல்வது தவறு.திருட்டு காபிபேஸ்ட் ஆசாமிகள்.//

    உண்மைதான் ஐயா.
    நாம் எல்லோரும் ஒருமித்து குரல்கொடுத்தால் இவர்களை ஒடுக்கமுடியும்

    ReplyDelete
  16. வணக்கம் மதுரன்
    இப்ப எதை சொன்னாலும் பதிலுக்கு அவர்கள் துரோகி என்னும் பட்டத்தை தயாராக வைத்துள்ளார்கள் கேட்காமலே தருவதற்கு..!!!!? 

    அடுத்து இப்பிடியான தலங்களில் பதிவுலகில் இருக்கும் பதிவுகளை திருடி போடுவதை என்னவென்று சொல்வது நான் பார்க்கும் அதிக நன்பர்களின் பதிவுகள் அவர்களால் திருடப்பட்டு நன்றி கூட போடாமல் பிரசுரித்ததை பார்த்திருக்கிறேன்..!! சமீபத்தில் கூட கந்தசாமியின் பதிவைகூட நியூ ஜப்னா தலம் பிரசுரித்திருந்தது இவர்களை என்னசெய்யலாம்..? 

    ReplyDelete
  17. @கந்தசாமி.இந்த நாதாரி இணையத்தளம் நடத்துற ஜந்துக்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று தான் உப்பிடி "யாழ் ,தமிழ் .தேசியம் "என்ற பெயர்களை பாவித்து உங்க இனையத்தளத்தை நடத்தாதீர்கள்..உங்கள் நாத்தம் பிடிச்சா செயர்ப்பாடுகளால் எங்கள் மண்ணையும் மக்களையும் நாறடிக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்கள் பெயர்களிலோ இல்லை உங்களை பெத்ததுகள் பெயர்களிலோ இணையத்தளத்தை நடத்துங்கள்...
    செய்திகளாக உங்கள் குடும்பங்களில் நடக்கும் சீர்கேடுகளையும் வீடியோவோடு போடுங்கள்... இன்னும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்..///

    உண்மைதான் கந்தசாமி. ஹிட்சுக்காக எம் மானத்தை விற்று எழுதிக்கொண்டு தாங்கள் சமூகத்தை திருத்துகிறார்களாம்.

    ReplyDelete
  18. யாழ்ப்பாணத்தின் இடம்பெறும் குடும்ப பிரச்சனைகளை கூட இவ்வாறன ஊடகங்கள் தவறாக சித்தரித்து வெளியிட்டு வருகின்றன . அத்துடன் இத்தகைய ஊடகங்கள் யாழில் இடம் பெறும் நல்ல விடயங்களை பகிர்வதே கிடையாது . வெறுமானே அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெறும் சமூக சீர் கேடுகளையும் குடும்ப பிரச்சனைகளை தவறாக சித்தரித்து வெளியிடுவதன் மூலம். தம்மை பிரபலப்படுத்த முனைகின்றன .

    ReplyDelete
  19. இவர்கள் போன்றோர் எப்போதும் கலாசாரக்காவலர் வேசம் போடுவார்கள் பின் அது எடுபடாத போது இனப்பற்றாளர் மோகம் கொள்வோர் இப்படியான இணையங்களை மக்கள் புறக்கனிக்க வேண்டும்!

    ReplyDelete
  20. மக்களின் அன்றாட விடயங்களைப் பேசாமல் பணம் பார்க்கும் நோக்கில் கிலுகிலு செய்திகளை நம்பியிருக்கும் மஞ்சல் தளங்களை மக்கள் விரட்டியடுகனும்!

    ReplyDelete
  21. திருட்டுப் பதிவில் இயங்கும் இவர்களை நம்பதிவாளர்கள் இனம் காட்டுவது காலத்தின் கட்டாயம் நல்ல ஒரு ஆய்வுப் பதிவு மதுரன்!

    ReplyDelete
  22. நாட்டில் நடக்கும் நல்லவை இந்த ஊனக்கள் பெரியோருக்குத் தெரியவருவதில்லைப் போலும்'!

    ReplyDelete
  23. மதுரன் துணிச்சலான நியாயமான பதிவு.... பரபரப்புக்காக தங்கள் இணையத்தின் ஹிட்ச்சுக்காக எதை எதையோ எழுதுகிறார்கள்... தன இனத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.... அவர்கள் நோக்கம் வாசகர்கள் புடிப்பதே..... இவர்களை எல்லாம் நடுரோட்டில் வைத்து சுடவேணும்...இப்படிப்பட்ட செய்தி போட்டு ஹிட்ஸ் வாங்குவது... தங்கள் வீட்டு பெண்களை வைத்து தொழில் செய்து நடத்துவது போன்ற கேவலமானது... சீ.. இது எல்லாம் ஒரு புளைப்பா........

    ReplyDelete
  24. //// யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாகபார்க்கத்தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.////


    உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.... இணையம் மட்டுமா காரணம்???????? உங்கள் சக பதிவர்கள் காரணம் இல்லையா??????
    மதுரன் யாழ்ப்பாணத்தை கற்பழித்தது இணையம் என்றால்.... அது இரண்டாவது கற்பழிப்பே... முதல் கற்பழித்தது.. மற்றவர்களுக்கும் அந்த துணிவை கொடுத்தது நம் சக "நடுநிலை பேசும்" பதிவர்களே.... இதுதான் உண்மை..

    ReplyDelete
  25. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஊடகங்கள் சிறுபிள்ளைத்தனமானவர்களின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது, சமீப காலத்திய யாழ் தமிழ் இணைய ஊடகங்களின் செய்ற்பாடுகள் மூலம் புலனாகிறது.//

    இங்கேயும் நம்ம நடுநிலை பேசும் வலைப்பூக்களையும் சேர்த்துக்கப்பா.. ஹீ ஹீ

    ReplyDelete
  26. மதுரன்........ நான் ஒரு தலை சிறந்த பதிவை போட்டு இருக்கேன் என்று நீங்கள் தாராளமாய் கொலரை தூக்கி விடலாம்... போகிற போக்கில் பல நியாயமான துணிச்சல் மிக்க தகவல்களை சொல்லி போகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. மதுரன்,

    ஹிட்ஸு-க்காக எதையெல்லாமோ செய்ய துணிந்து விட்டது இந்த இணையச் செய்தி ஊடகங்கள்.(இதில் சில வலை பதிவுகளும் அடக்கம்)

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இணையப்பக்கங்களை நான் வாசித்ததில்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல அது மாதிரியான மானம் விற்கும் பிழைப்பை நடத்துபவர்களுக்கு நான் பரிந்துரைப்பது என்னவென்றால்,

    “PORN MOVIES" - இணைப்பைக் கொடுத்து விட்டால் பன்மொழிக்காரர்களும் வந்து பார்ப்பார்கள். இன்னும் கூடுதலான “ஹிட்ஸ்” கிடைக்கும். அதனால் கூடுதலாய் சம்பாதிக்கலாம்.

    அதில் வரும் வருவாயை வைத்து தன் ”குடும்பத்தைச் சார்ந்த”வர்களுக்கு வேண்டியதை வாங்கித் தரலாம்.

    ReplyDelete
  28. வணக்கம் மோனை,

    நான் உந்த சங்கடங்களைப் பத்தி நிறையக் கதைக்கணும் எண்டு இருந்தன். அதுக்குள்ள நீ முந்திட்டாய். உன்னானை சொல்லுறன் இதுகளுக்கெல்லாம் ஒரு முடிவு கெதியா வரும்.

    இலங்கையில இருக்கிற மீடியாக்காரர், பதிவுலகத்தில இருக்கிற மீடியாக்காரர் ஒருத்தரும் வாய்திறந்து இதுகளைப் பத்தி எதுவும் கதைக்கலை. துணிஞ்சு கதைச்சிருக்காய் பெடியா. அதுக்கு ஒரு பெரிய தாங்ஸ்.

    இவனுங்க ஏன் உப்பிடி கொதிக்கிறாங்க. நான் நினைக்கிறன் ‘கொலைக்களத்துக்கு போற பலியாடு ரொம்ப கத்துமாம்;’ அதுபோல உவங்ட கதையும் கெதீல முடியப்போவுது மோனை. ‘இன்டியன் கில்மா’ இணையத்துக்கு பிறகு அதிகம் படிக்கிற தளம் உவங்கட தானாம். அது தெரியாம தங்கட பக்கம் வார சனங்கள் எல்லாம் தாங்கள் கிழிக்கிற கிழிப்பில வருதெண்டு நினைச்சு சந்தோசப்படுகினமாம்.

    கம்பஸில படிக்கிற பிள்ளையல் வருசா வருசம் கப் கலெக்சன் செய்யுறது வழமை. அதை பெரிய பிடுங்கி போல செய்தியா போடுறாய். அதுகும் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக வெளியேறப்போற பிள்ளையளைப் பார்த்து ‘பெடி பெட்டையள்’ எண்டு மரியாதையில்லாமல் தலைப்புச் செய்தியில போடுறாய்.

    வேம்படிப் பிள்ளையள் ஏதோ தேவைக்காக நெற் கபே போய் நிண்டா, அதுகள் ஏதோ அங்க கில்மா படம் பாக்கிறதா எழுதுறாய் பரதேசி. உன்னோட பிரச்சினைப்பட்ட ஒரு மீடியாக்காரனை தாக்குறதுக்காக இன்னொரு இளம் பெண்ணின்டை முழுப்பெயரையும் போடுறாய். இதுதான் உன்டை ஊடகமோ அறுவானே!

    நீ உன்னை வெளிப்படுத்தி செய்தி போடு பாப்பம். மறு நாளே நீ காணாமல் போயிடுவாயடா பன்னாடை. ஆனா ஒண்டு சொல்லுறன், போனும் கையுமா திரியும் உன்டை வாலுகள் வசமா எங்கையாவது கம்பஸிலையோ, கோவிலிலையோ அல்லது வேலாயுதம் படம் போடுற தியேட்டரிலையோ வருங்கள் தானே! அப்ப காட்டுறமடா மக்கள் சக்தி என்ன எண்டுறதை.

    நீங்கள் விருந்தாளிகளுக்கு பிறந்தனீங்கள் எண்டா உங்கட சேவையை தொடருங்கோ.

    ReplyDelete
  29. மச்சி நாம என்னத்தை கத்தினாலும் இவனுங்க திருந்தப்போவது இல்லை..

    எங்கள் பதிவுகளை மட்டும் காப்பி(கொப்பி) அடித்து போடும் இவர்களிடம் ஒரு சவால் ஏலும் என்றால் இந்தப்பதிவை காப்பி பண்ணி உங்கள் தளத்தில் போடுங்க பார்ப்போம்

    ReplyDelete
  30. பிரச்சனை இல்லாத இடம் ஓன்றும் இல்லை எல்லா இடத்திலும் காலாச்சார சீரழிவுகள் நடக்கின்றனதான் ஆனால் இவர்கள் யாழ்ப்பானத்தில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து..முழு யாழ்ப்பாணமுமே அப்படி என்ற கண்ணோட்டத்தில் செய்தி வெளியிடுவது கண்டனத்துக்குறிய விடயம்

    ReplyDelete
  31. ///இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. ////

    உண்மையில் இந்த மாயயை கலைய பதிவர்கள் ஓன்று படவேண்டும்

    ReplyDelete
  32. இந்தப்பதிவை படிக்கும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்தப்பதிவை உங்கள் முகநூலில் பகிருங்கள் இதனால் இந்தப்பதிவும் இன்னும் பலரைசென்று சேரும்

    ReplyDelete
  33. @கந்தசாமி.இந்த நாதாரி இணையத்தளம் நடத்துற ஜந்துக்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று தான் உப்பிடி "யாழ் ,தமிழ் .தேசியம் "என்ற பெயர்களை பாவித்து உங்க இனையத்தளத்தை நடத்தாதீர்கள்..உங்கள் நாத்தம் பிடிச்சா செயர்ப்பாடுகளால் எங்கள் மண்ணையும் மக்களையும் நாறடிக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்கள் பெயர்களிலோ இல்லை உங்களை பெத்ததுகள் பெயர்களிலோ இணையத்தளத்தை நடத்துங்கள்...
    செய்திகளாக உங்கள் குடும்பங்களில் நடக்கும் சீர்கேடுகளையும் வீடியோவோடு போடுங்கள்... இன்னும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்..//

    சரியா சொன்னீங்க கந்தசாமி. இதை செய்பவர்கள் அதையும் செய்யலாமே. உங்களுக்கு பணமும் ஹிட்ஸும் தானே முக்கியம்

    ReplyDelete
  34. @♔ம.தி.சுதா♔சே எவ்வளவு ஒரு கேவலமான விடயம்.. இனத்துவேசம் விதைக்கவா இப்படி எழுதுகிறார்கள்//

    இனத்துவேசம்தான் அவர்களின் முக்கிய ஆயுதம். அதை வைத்துத்தான் தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டி மக்களை ஏமாற்றலாம். தாம் செய்யும் அக்கிரமத்துக்கு காரணம் கற்பிக்கலாம்

    ReplyDelete
  35. @♔ம.தி.சுதா♔என்னையா பதிலிது... உங்க தளத்திற்கு நீங்கள் தானே பொறுப்பு.. இதென்ன கள்ளு கொட்டிலா நடக்குது..

    பொறுங்க மிகுதிக்கு விடிய வாறன்..//

    இந்த பதில் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லியது சுதா அண்ணா

    ReplyDelete
  36. @காட்டான்
    வணக்கம் காட்டான் மாமா
    //இப்ப எதை சொன்னாலும் பதிலுக்கு அவர்கள் துரோகி என்னும் பட்டத்தை தயாராக வைத்துள்ளார்கள் கேட்காமலே தருவதற்கு..!!!!? //

    அதுவும் சாதாரண துரோகி அல்ல.. தேசத்துரோகி..
    பார்ப்போம் எவ்வளவு காலத்துக்கு..

    //அடுத்து இப்பிடியான தலங்களில் பதிவுலகில் இருக்கும் பதிவுகளை திருடி போடுவதை என்னவென்று சொல்வது நான் பார்க்கும் அதிக நன்பர்களின் பதிவுகள் அவர்களால் திருடப்பட்டு நன்றி கூட போடாமல் பிரசுரித்ததை பார்த்திருக்கிறேன்..!! சமீபத்தில் கூட கந்தசாமியின் பதிவைகூட நியூ ஜப்னா தலம் பிரசுரித்திருந்தது இவர்களை என்னசெய்யலாம்..? //

    அவர்களுக்கு சொந்தமாக எழுத தெரிந்ததெல்லாம் ஆபாசம்தான். மற்றதெல்லாம் காப்பிபேஸ்ட்தான்.

    ReplyDelete
  37. @Mahan.Thamesh
    யாழ்ப்பாணத்தின் இடம்பெறும் குடும்ப பிரச்சனைகளை கூட இவ்வாறன ஊடகங்கள் தவறாக சித்தரித்து வெளியிட்டு வருகின்றன . அத்துடன் இத்தகைய ஊடகங்கள் யாழில் இடம் பெறும் நல்ல விடயங்களை பகிர்வதே கிடையாது . வெறுமானே அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெறும் சமூக சீர் கேடுகளையும் குடும்ப பிரச்சனைகளை தவறாக சித்தரித்து வெளியிடுவதன் மூலம். தம்மை பிரபலப்படுத்த முனைகின்றன //

    உண்மைதான் தமேஷ்.
    இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது. இனிமேலும் இதற்கு இடம்கொடுக்கக்கூடாது

    ReplyDelete
  38. @தனிமரம்இவர்கள் போன்றோர் எப்போதும் கலாசாரக்காவலர் வேசம் போடுவார்கள் பின் அது எடுபடாத போது இனப்பற்றாளர் மோகம் கொள்வோர் இப்படியான இணையங்களை மக்கள் புறக்கனிக்க வேண்டும்!//

    உண்மைதான் நேசன் அண்ணா. மக்கள் உணர்ந்து இவர்களை விரட்டி அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete
  39. @துஷ்யந்தன்
    ஆமாம் துஷி. இப்படி கேவலமான தொழிலை செய்துகொண்டு அதை சுட்டிக்காட்ட்டுபவர்கள் மீது அபாண்டமான பழிகளை போட்டு அவர்களின் வாயை அடைக்க பார்க்கிறார்கள்

    ReplyDelete
  40. @துஷ்யந்தன்
    உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.... இணையம் மட்டுமா காரணம்???????? உங்கள் சக பதிவர்கள் காரணம் இல்லையா??????
    மதுரன் யாழ்ப்பாணத்தை கற்பழித்தது இணையம் என்றால்.... அது இரண்டாவது கற்பழிப்பே... முதல் கற்பழித்தது.. மற்றவர்களுக்கும் அந்த துணிவை கொடுத்தது நம் சக "நடுநிலை பேசும்" பதிவர்களே.... இதுதான் உண்மை..//

    இல்லை துஷி. இவர்கள் தளங்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

    ReplyDelete
  41. @துஷ்யந்தன்மதுரன்........ நான் ஒரு தலை சிறந்த பதிவை போட்டு இருக்கேன் என்று நீங்கள் தாராளமாய் கொலரை தூக்கி விடலாம்... போகிற போக்கில் பல நியாயமான துணிச்சல் மிக்க தகவல்களை சொல்லி போகிறீர்கள்... வாழ்த்துக்கள்...//

    நன்றிப்பா

    ReplyDelete
  42. நான் என்னுடைய முக நூலில் பகிர்ந்து விட்டேன் .இந்த பதிவை பார்க்கும் எவரும் இதில் உள்ள விடயங்களை ஏற்றுக் கொண்டால் உங்கள் முக நூலில் பகிருங்கள் .பலரை சென்றடைய வேண்டிய பதிவு இது

    ReplyDelete
  43. @சத்ரியன்
    அப்படி சொல்லுங்க சார்.
    ஆனா இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது. மேலும் மேலும் அதையேதான் செய்வார்கள்

    ReplyDelete
  44. வணக்கம் மது,

    நான் நைட்டு நேரத்திற்கு தூங்கியதால் வர முடியவில்லை.

    இன மானத்தை விற்றுப் பிழைக்கும் ஈனர்கள் தொடர்பாக நல்லதொரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    இத்தோடு உறைத்தால் சந்தோசமே!
    ஆனாலும் திருந்துவார்களா என்பது கேள்விக் குறியே!

    நானும் தனிப்பட்ட ரீதியில் சிலரிடம் சொல்லிப் பார்த்தேன்.
    கேட்பதாக இல்லை.


    காப்பி பேஸ்ட் பண்ணுவோரிடம் எம் பதிவினை நீக்கச் சொல்லி மெயில் அனுப்பினால் அது உங்க பதிவு தானா?
    அதனை நீங்கள் தான் எழுதினீங்களா என்று ஆதாரம் வேறு கேட்கிறார்கள்..

    ஹே..ஹே...

    ReplyDelete
  45. பதிவர்கள் நாம் அனைவரும் ஒன்று கூடித் தான் இச் செயற்பாடுகளிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

    மது நீங்கள் பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  46. @குறுக்காலபோவான்
    வணக்கம் ஐயா

    உங்கள் கருத்துக்கள் காத்திரமானவை
    நன்றி ஐயா

    ReplyDelete
  47. @K.s.s.Rajhமச்சி நாம என்னத்தை கத்தினாலும் இவனுங்க திருந்தப்போவது இல்லை..

    எங்கள் பதிவுகளை மட்டும் காப்பி(கொப்பி) அடித்து போடும் இவர்களிடம் ஒரு சவால் ஏலும் என்றால் இந்தப்பதிவை காப்பி பண்ணி உங்கள் தளத்தில் போடுங்க பார்ப்போம்//

    அப்பிடி போடுங்க ராஜ்

    ReplyDelete
  48. நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

    ஆமா நானும் நிறைய இலங்கையை சேர்ந்த பதிவளர்களின் பதிவை பார்த்திருக்கிறேன்

    பரபரப்பாக தலைப்பு போட்டு எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பார்கள்

    உங்களுடைய இந்த பதிவு நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. @K.s.s.Rajh
    ராஜ், இவர்களுக்கு எம் மண் பற்றியோ மக்கள் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை. தம் பிழைகளுக்கு ஒரு காரணம் சொல்லவே அப்படி செய்கிறார்கள். நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று பட்டு இதற்கு ஓர் முடிவு காணவேண்டும்

    ReplyDelete
  50. @K.s.s.Rajh
    இந்தப்பதிவை படிக்கும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்தப்பதிவை உங்கள் முகநூலில் பகிருங்கள் இதனால் இந்தப்பதிவும் இன்னும் பலரைசென்று சேரும்//

    நன்றி ராஜ்

    ReplyDelete
  51. @நிரூபன்
    நன்றி நிரூபன்.

    //காப்பி பேஸ்ட் பண்ணுவோரிடம் எம் பதிவினை நீக்கச் சொல்லி மெயில் அனுப்பினால் அது உங்க பதிவு தானா?
    அதனை நீங்கள் தான் எழுதினீங்களா என்று ஆதாரம் வேறு கேட்கிறார்கள்..//

    செய்யிறது அசிங்கம். அதுக்கு ஆதாரம் வேற வேணுமா அவங்களுக்கு

    ReplyDelete
  52. @kobirajநான் என்னுடைய முக நூலில் பகிர்ந்து விட்டேன் .இந்த பதிவை பார்க்கும் எவரும் இதில் உள்ள விடயங்களை ஏற்றுக் கொண்டால் உங்கள் முக நூலில் பகிருங்கள் .பலரை சென்றடைய வேண்டிய பதிவு இது//

    ரொம்ப நன்றி கோபி

    ReplyDelete
  53. @ஹைதர் அலி
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  54. என்ன சொல்லுவதென்றே
    தெரியவில்லை மிகவும் வருத்தமாய் இருக்கிறது
    கண்டிக்க தக்கது
    என்னுடைய வருத்தங்களும்
    கண்டனங்களும்

    ReplyDelete
  55. அதெல்லாம் ஊடக தர்மாமப்பா... உங்களுக்காவது இனைய ஊடகம், எங்களுக்கு தினசரி நாளிதழே அப்படி தான் இருக்குது... வாசகர்களாகிய நாம் நிராகரித்தால் போதும்... எந்த எந்த தளங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பதிவு போடுங்கள் அந்த பதிவை வலை பதிவர்கள் அனைவரும் போடுவோம்... காரணமும் இணைத்து விட்டால் நமக்கு வெற்றியே

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. மாப்ள பகிர்வுக்கு நன்றி...விஷயங்கள் புரிந்தது!

    ReplyDelete
  58. வேதனையான விசயம் தான் நண்பரே

    ReplyDelete
  59. உதயனும் ஒன்றும் சளைத்ததல்ல!பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது!இப்போதெல்லாம் அரசை எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்தால் பதிவிடுவதில்லை!அரச விளம்பரத்துக்காக சோரம் போய் விட்டது உதயன்!

    ReplyDelete
  60. ஊதிப் பெருப்பிப்பதில் புலம்பெயர் ஊடகங்களுக்கு நிகராக ஈழத்திலும் இயங்குகிறார்கள்.இதுவும் ஒரு வகை ஊடுருவல் தான்!புரிந்து கொள்ள "மூளை" வேண்டும்

    ReplyDelete
  61. சரியா சொன்னீங்க நண்பரே!! ரொம்ப நாள் இது போன்றே செய்திகளை வெளியிட்டு கொண்டு இருக்க முடியாது

    என்ன செய்வது இவர்கள் விளம்பரம் செய்து கொள்வதற்கு மலம் திங்க கூட அஞ்ச மாட்டார்கள்.

    ReplyDelete
  62. வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்! உந்த எருமைகளுக்கு இவை உறைக்காது. அவர்களை நடுவெயிலில் விட்டு கழுத்தை கொஞ்சம் கொஞ்சமா வெட்டோணும்! உவங்கின்ர தளத்திற்கு போறதே கலாச்சார சீர்கேடு!

    ReplyDelete
  63. விழிப்புணர்வூட்டும் துணிச்சலான பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. பெரும்பாலான தமிழ் இணைய ஊடகங்களும் சமுதாயத்தின்மீதான அக்கறை சற்றும் இல்லாமல் பரபரப்பான செய்திகளாக வெளியிட்டு தம் இருப்பை உறுதி செய்துகொள்ளவும் வருவாயை அதிகரிக்கவும் எமது சமுதாயத்தைப் பலிக்கடா ஆக்குவதை ஒவ்வொருவரும் கண்டிக்கவேண்டும்

    ReplyDelete
  65. இப் பதிவுக்குத் தலை வணங்குகின்றேன் .மிக்க நன்றி சகோ துணிச்சலாக நீதியைக் கேட்டமைக்கு .வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர .......

    ReplyDelete
  66. மதுரன்....!

    என்னுடைய மனதில் தொடர்ந்தும் “இந்த இழிந்த செயல்களையும்- பொறுப்பற்ற தனங்களையும்- முறையற்ற ஊடகநெறியையும்“ பரப்பி வரும் தளங்களின் மீது தார்மீக கோபம் இருந்தே வந்திருக்கிறது. ஆனாலும், இவர்களை திருத்திவிட வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

    ஏனெனில், எங்களுடைய சமூகத்தை விமர்சிப்பதற்கும்- தவறாக பிரசாரம் செய்வதற்கும் வித்தியாசம் தெரியாத அரைக்கிறுக்குகள். அதுபோக, இவர்கள் ஒருவகை மனத்தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருபவர்கள். “கலாசார காவலர்கள்“ என்கிற போர்வையில் தங்களின் மன வங்கிரங்களை காட்டி காசு பார்க்க அலைபவர்கள். இவர்களை நாங்கள் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் மிகவும் நல்லது.

    கிட்டத்தட்ட நீலப்படங்களை விற்கும் தளங்கள் போலவே பல தருணங்களில் இந்த பொறுக்கித் தளங்கள் செயற்பட்டு வருகின்றன. அப்படிப்பட்டவர்களிடம் “ஊடக தர்மத்தையும்- பாரம்பரியத்தையும்- தொழில் நேர்த்தியையும்“ எதிர்பார்க்க முடியுமா?

    அது என்ன விலை என்று கேட்கக்கூடிய ஜென்மங்கள்!

    (தவிர்க்க முடியாத கோபத்தினால் “ஜென்மங்கள்- பொறுக்கிகள்“ என்கிற வார்த்தைகளை இவர்களைச் சுட்டிக்காட்ட பாவித்திருக்கிறேன். பொறுத்தருள்க)

    ReplyDelete
  67. குரங்குகள் கையில் பூமாலைகள் சிக்கிவிட்டது... :(
    நானும் இது பற்றி கடந்த மார்கழி மாதத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்.
    http://nizal-sinmajan.blogspot.com/2010/12/blog-post_21.html

    ReplyDelete
  68. suryajeeva said...
    அதெல்லாம் ஊடக தர்மாமப்பா... உங்களுக்காவது இனைய ஊடகம், எங்களுக்கு தினசரி நாளிதழே அப்படி தான் இருக்குது... வாசகர்களாகிய நாம் நிராகரித்தால் போதும்... எந்த எந்த தளங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பதிவு போடுங்கள் அந்த பதிவை வலை பதிவர்கள் அனைவரும் போடுவோம்... காரணமும் இணைத்து விட்டால் நமக்கு வெற்றியே
    //

    இப்படி செய்யலாமே?

    ReplyDelete
  69. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    ReplyDelete
  70. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

    உங்கள் தளம் தரமானதா..?

    இணையுங்கள் எங்களுடன்..

    http://cpedelive.blogspot.com

    ReplyDelete
  71. நல்லபதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. இவ்வாறான குரல்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் எழுவதாக இருந்தால் அதற்கு புலிகளின் முன் அனுமதி பெற்று யார் யார் அதற்கு தலைவர் செயலாளராக வரவேண்டும் என புலிகளே தெரிவு செய்வார்கள். புலிகள் தாங்கள் தெரிவுசெய்பவர்களில் தேசத்துரோகிகள் என அவர்களது மனதில் தென்படுபவர்களை களை எடுத்தே இவ்வாறான குரல்களை ஒலிக்கச்செய்வார்கள். //

    ReplyDelete
  73. பதிவு அருமை.இவங்களை எல்லாம் நடு ரோட்டில கட்டி வைச்சு பச்சை மட்டையால வெளுக்கோனும்.உதயன், சரவணபவனை தனிப்பட்டரீதியில் சாடியது தவறு. ஆனால் அவங்கள் எல்லாம் திறம் என்றும் இல்லை

    ReplyDelete
  74. அடித்து துரத்துங்கள் அவர்களை.

    ReplyDelete
  75. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  76. உங்களது துணிச்சலான குரலைப் பாராட்டுகிறோம்.... இது அனைவரினதும் உள்ளக் குமுறல்... இதைப் பார்த்தும் திருந்தாத அது என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை.வெளிநாடொன்றில் ஒளித்திருந்து கத்தும் இந்த ஈனப்பிறவியின் பெயர் விபரங்களைப் பகிரங்கப்படுத்த ஆவன செய்க... தொடரட்டும் உங்கள் பணி... எப்போதும் உங்களிற்கு ஆதரவாய் இருப்போம்.

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |